கோவை மார்க்கெட் கடையில் ரூ. 2 லட்சம் திருடி விட்டு தீ வைத்த மர்ம நபர்கள்..!

கோவை : மேட்டுப்பாளையம் புளு ஹில்ஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசபிக் (வயது 28) இவர் சிறுமுகை,பக்கம் உள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளை பூண்டு கடை வைத்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .மார்க்கெட் கூலித் தொழிலாளி அஜ்மல் என்பவர் இவருக்கு போன் செய்து கடைக்குள் தீ பிடித்து எரிவதாக கூறினார்.வந்து பார்த்தபோது யாரோ மர்ம ஆசாமிகள் ஓட்டை பிரித்து உள்ளே கடைக்குள் இறங்கி அங்கிருந்த ஒரு 2 லட்சத்தை திருடிவிட்டு கடைக்குள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து முகமது சபிக் சிறுமுகை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக சிறுமுகை ஆலாங்கொம்பு, கருமோ கையை சேர்ந்த பூபதி ( வயது 32) என்பவரை இன்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.