கோவை: குடில் ஓட்டல்களில் அனுமதியின்றி மது விற்பனை 17 உரிமையாளர்கள் மீது வழக்கு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பசூர், மேட்டுப்பாளையம் ரோடு,கெம்பநாயக்கன்பாளையம்,கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கு மேற்பட்ட இடங்களில் குடில் அமைத்து ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது .இதில் சில ஓட்டல்களில் உணவருந்த வருபவர்களுக்கு அனுமதியில்லாமல் மதுபானங்கள் விற்பனை மற்றும் மது குடிக்க அனுமதிப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் துணை சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நித்யா, நவநீதகிருஷ்ணன், ராஜசேகர். ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று குடில ஒட்டல்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் இதில் அங்கிருந்த 9 ஓட்டல்களின் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், மேலும் மது குடிக்க அனுமதித்ததும் தெரிய வந்தது .ஓட்டல்களில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 385மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக அந்த ஓட்டல் நடத்தி வந்த நீலகிரி மாவட்டம் லோகேஷ் குமார் ,ஈரோடு மாவட்டம் ராஜேஷ் கண்ணா,பர்கூர் சதாசிவம் சண்முகசுந்தரம் அன்னூரை சேர்ந்த பாலுசாமி தங்கவேல், நாராயணன், சிவகங்கை மாவட்டம் வினோத்,ஈரோடு மாவட்டம் பழனிச்சாமி ஆகிய 9பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாபா ஓட்டல்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் பெயரில் அங்கு திடீர் சோதனை நடத்தப்பட்டது .இதில் 8ஓட்டல்களில் மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.ஓட்டல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது..