கோவை பேரூர் அருகே உள்ள காடுவெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்றபழனிச்சாமி (வயது 45) கூலி தொழிலாளி. இவர் தனது நண்பருடன் சேர்ந்து பந்தல் போடும் வேலைக்கு செல்வது வழக்கம். நண்பருடன் பழகி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நண்பர் வீட்டுக்குகண்ணன் சென்றார். அந்த நேரத்தில்வீட்டில் யாரும் இல்லாததால் நண்பரின் மகளான 14வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் அந்த சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணமும் செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனைபோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கண்ணனுக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்..
சிறுமி பாலியல் பலாத்காரம் – தொழிலாளிக்கு 26 ஆண்டு சிறை..!
![](https://www.newsexpresstamil.com/wp-content/uploads/2024/10/kutram.jpg)
Leave a Reply