தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் டிக்கெட் கட்டணம் மாற்றியமைப்பு..!!

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தொலைதூரங்களுக்கு செல்ல மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் நாடுகிறார்கள்.அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றியமைப்பு.

அதில் இருக்கும் வசதிகளை போலவே ஏசி வசதி உள்ளிட்டவைகளை கொண்ட விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக கடந்த 2019ம் ஆண்டு முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் எளிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்துகளில் வார நாட்களில் பயணம் செய்யும் போது 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அதே வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பயணம் செய்யும் போது அந்த கட்டண சலுகையும் இல்லாமல் இருந்தது.

தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்து கழகம் உட்பட 8 போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது; இந்நிலையில் தற்போது அந்த கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொங்கல் பண்டிகை முதல் ரூ.30 வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் அரசுவிரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.