தமிழ்நாட்டு சினிமா தொழிலாளர்களுக்கு சூர்யா செய்யும் அநியாயம்.. வெளியில் மட்டும் தான் காந்தி வேசமா..?

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சிறுத்தை சிவாவின் படம் ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சூர்யா தான் தயாரிக்கும் படங்களை ஓடிடி தளத்திற்கு கொடுத்து வருகிறார்.

இதனால் ஏற்கனவே திரையரங்கு தயாரிப்பாளர்கள் சூர்யா மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது படத்தின் லொக்கேஷனை பெரும்பாலும் ஹீரோக்கள் தான் முடிவு செய்வார்கள். அந்த வகையில் சிறுத்தை சிவா உடன் சூர்யா இணையும் படத்திற்கு சில இடங்களை தேர்வு செய்துள்ளாராம்.

அதாவது மும்பை, கோவா, ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்த சூர்யா தேர்வு செய்துள்ளார். இதனால் அந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு நிறைய சலுகைகள் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் சூர்யா மீது இவர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். தளபதி விஜய் கூட தமிழ்நாட்டு தொழிலாளர்கள் பாதிக்க கூடாது என வாரிசு படத்தின் சில காட்சிகளை சென்னையில் எடுக்க படக்குழுவிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல் சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

மேலும் படப்பிடிப்பு எடுக்க ஏதுவான இடங்கள் தமிழ்நாட்டிலேயே நிறைய இடங்கள் உள்ளது. ஆனால் பெரும்பாலும் டாப் நடிகர்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த தான் ஆர்வமாக உள்ளனர். இதனால் சினிமாவை மட்டுமே நம்பியுள்ள இங்கு உள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

சூர்யா வெளியில் மட்டும் அகரம் பவுண்டேஷன் போன்ற நிறைய உதவிகள் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி விவசாயத்தை காப்போம் என்று பல வசனங்கள் பேசி வருகிறார். வெளியில் மட்டும் இப்படி காந்தி வேஷம் போட்டு தமிழ்நாட்டு சினிமா தொழிலாளர்களுக்கு அநியாயம் செய்கிறாரே என சூர்யாவை சாடி வருகின்றனர்.