நகை தொழிற்சாலையில் ரூ 75 லட்சம் தங்கம் அபேஸ் செய்த சூப்பர்வைசர் தலைமறைவு- போலீஸ் வலை..

கோவை ஆக: கோவை சலீவன் வீதியில் நகை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்குள்ள தங்கத்தை ஆய்வு செய்த போது 1467. 2 கிராம் தங்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் இருக்கும்.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர்.கார்த்திகேயன் (வயது 37) வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.புகாரில் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரும் வீரகேரளத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ( வயது 34)என்பவரிடம் தான் வழக்கமாக தங்கத்தை, கொடுத்து அனுப்புவதாகவும்,அவர்தான் இந்த மோசடியை செய்திருப்பதாகவும் கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் சூப்பர்வைசர் ஜெகதீஷ் மீது மோசடி உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.