போதை பொருட்கள் விற்ற 26 கடைகளுக்கு சீல்:ரூ.6.50 ஆயிரம் அபராதம் – 200 கிலோ பறிமுதல் – ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி.!!

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் போதை பொருட்கள் விற்ற 26 கடைகளுக்கு சீல்… ரூ.6 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம்- 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்..

சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்களும் தங்களையே மறந்து போதைக்கு அடிமையாகி உள்ளனர் இதில் இப்போது பெற்றோர்களின் தவறான அணுகுமுறையால் பருவ பெண்களும் மேலைநாட்டு கலாச்சாரம் போல் போதைக்கு அடிமையாகி விட்டனர். இதை அடியோடு ஒழித்திட ஆவடி போலீஸ் கமிஷனர் சமூக சேவகர் மக்களின் நாயகன் கி. சங்கரின் அதிரடி உத்தரவின் பேரில் அதிரடி போலீஸ் படையினரும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகளை மேற்கொண்டனர் . பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரயில் நிலையம் பேருந்து நிலையங்களில் மார்க்கெட் பஜார் போன்ற பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் டீக்கடைகள் மளிகை கடைகள் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் குட்கா ஹான்ஸ் கூல் லிப் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்த 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது . அபராதமாக ரூ 6 லட்சத்து 50 ஆயிரம் விதிக்கப்பட்டது. உங்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா ஹான்ஸ் கூல் லிப் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் கமிஷனர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது போதைப் பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வும் எனக் கூறியுள்ளார்..