வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை- மளிகை கடை வியாபாரி கைது..!

வீட்டில் குட்கா பதுக்கிய வியாபாரி கைது. கோவை ஆக 7 கோவை கணபதிபுதூர் சங்கனூர்ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 63)மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 4 மூட்டை குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக மாணிக்கவாசகம் கைது செய்யப்பட்டார். ரவி, செல்வ ரத்தினம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணிக்கவாசகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.