கோவை பெண் கொலையில் திடீர் திருப்பம்… கள்ளக்காதலன் சிக்கியது எப்படி ? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்.!!

கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகர் பேஸ்- 2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 44)இவர்  அன்னூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி( வயது 41)) இவர்களுக்கு கார்த்திகா( வயது 16 )என்ற மகள் உள்ளார்..இவர் அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஜெகதீஸ்வரி தினமும் தன்னுடைய மகளை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் செல்வார். 29-ந் தேதி காலையிலும் ஸ்கூட்டரில் மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். கணவரும் வேலைக்கு சேர்ந்தால் வீட்டில் ஜெகதீஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் மாலையில் தாய் அழைத்துச் செல்ல வருவார் என்றும் மகள் கார்த்திகா பள்ளியில் காத்து இருந்தார் .மாலை 5-30 மணி ஆகியும் தாய் வராததால் தனது வீட்டுக்கு கார்த்திகா நடந்து வந்தார். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது தாய் ஜெகதீஸ்வரி படுக்கை அறையில் பிணமாக கிடைப்பதை பார்த்து கதறி அழுதார் .உடனடியாக அருகில் உள்ளவர்களை அழைத்து தன்னுடைய தாய் இறந்து கிடப்பது பற்றி தெரிவித்தார். இது குறித்து பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. துணை போலீஸ் கமிஷனர் சண்முகம்,உதவி கமிஷனர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள் .இதில் ஜெகதீஸ்வரி கழுத்தில் கிடந்த 4 பவுன தங்கச்செயின் மற்றும் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல், மோதிரம் மொத்தம் ஐந்தே முக்கால் பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.ஜெகதீஸ்வரியை கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் ஜெகதீஸ்வரி கொலை குறித்து அவரது கணவருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். கொலை நடந்த வீட்டுக்கு போலீஸ் துப்பறியும் நாய் வெல்மா கொண்டு செல்லப்பட்டது . அது சிறிது தூரம் ஓடியது யாரையும் பிடிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.கொலையாளியை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசு, கணேஷ்குமார், செந்தில்குமார் கார்த்திகேயன் மற்றும் போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது .இவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.இதில் பைக்கில் வந்த ஒரு ஆசாமி கொலை நடந்த வீட்டில் 2 மணி நேரம் இருந்து விட்டு வெளியே சென்றது தெரிய வந்தது.பைக்கில் இருந்த பதிவு எண்ணை வைத்து கொலையாளி யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்..கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த ஆசாமிதான் இந்த கொலையை நடத்தி இருப்பதும்,. கொலையை மறைப்பதற்காக நகைகளை எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.இதில் அந்தப் பெண்ணை கொலை செய்தது கோவை ராமநாதபுரம், கிருஷ்ணன் கோவில் வீதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 33) என்பதும் அவர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர் .போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது . இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்ராஜ் சேரன் நகர், அண்ணா நகர் பாலாஜி நகர் பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார் .அப்போது அவருக்கு ஜெகதீஸ்வரியுடன பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தங்களது செல்போனில் பேசி வந்தனர். மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும் உல்லாசமாக இருந்து வந்தனர் . இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோகன்ராஜ் கோவை ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் குடியேறினார். அதன் பிறகும் மோகன்ராஜ்க்கும் ,ஜெகதீஸ்வரிக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்தது .அவர்கள் இருவரும் வாட்ஸ்அப் கால் மூலம் பேசி வந்தனர். இதற்கு இடையே ஜெகதீஸ்வரிக்கு வேறு சிலருடன் தொடர்பு இருந்தது மோகன்ராஜ்க்கு தெரியவந்தது .இது காதலன் மோகன் ராஜ்க்கு பிடிக்கவில்லை.இதனால் மோகன்ராஜ் அவரை எச்சரித்துள்ளார் .அதை மீறி ஜெகதீஸ்வரி மற்றவர்களுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மோகன் ராஜ் ஜெகதீஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் .சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெகதீஸ்வரி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது தெரிய வந்தது.இவர் கடந்த 28ஆம் தேதி காலை ஜெகதீஸ்வரி தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் அங்கு சென்ற மோகன் ராஜ் துணியால் ஜெகதீஸ்வரி வாயை பொத்தி கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். போலீசார்ரின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக ஜெகதீஸ்வரி அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு சென்று உள்ளார் .அதன் பிறகு வழக்கம் போல தனது பணியை தொடர்ந்து உள்ளார் .ஜெகதீஸ்வரியிடம் பறித்த நகையை ஓரு கடையில் விற்பனை செய்துள்ளார் .அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஜெகதீஸ்வரியிடம் தனது செல்போனில் இருந்து பேசினால் மாட்டிக் கொள்வோம் என்பதால் வேறு நபர்களுடைய செல்போனை வாங்கி பேசி வந்துள்ளார். ஆனாலும் அவரை கண்டறிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி முக்கிய பங்கு வைத்துள்ளது. மோகன்ராஜ்க்கு சொந்த ஊர் சேலம், அவர் மீது சேலத்தில் ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது .குத்து சண்டை பயிற்சியாளரான அவர் பள்ளி குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தும் வந்துள்ளார் காவல்துறையை திசை திருப்பவே மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் மாற்றியது நகை பறித்தது போன்றவற்றை செய்துள்ளார் .கைதான மோகன்ராஜிடமிருந்து ஒரு பைக் ‘ஒரு ஸ்கூட்டி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி கொலையாளியை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்..கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..