மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் சாலைகளை சீரமைக்க கோரி திடீர் போராட்டம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள சாலைகள் மிகவும் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது . இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்படுவது உடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்து மேட்டுப்பாளையம் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் 9 பேர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நகர மன்ற குழு தலைவர் முகமது சலீம் தலைமையில் பேருந்து நிலையத்தில் குண்டம் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெறுவதை அறிந்து மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மேட்டுப்பாளையம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . இன்று இரவுக்குள் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள குண்டும் குழிகளை சீரமைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததில் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள் . இந்த போராட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் குரு பிரசாத், மீரா மைதீன், சுனில் குமார், ராஜேஷ், கலைச்செல்வி, விஜயலட்சுமி, மருதாச்சலம், தனசேகரன், உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமான கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நகர மன்ற உறுப்பினர் சலீம் கூறியதாவது இன்று இரவுக்குள் இந்த பணிகளை சரி செய்யவில்லை. நாளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்..