மேட்டுப்பாளையம் நடைபாதை வியாபாரிகள் ஆணையாளர் இரா.அமுதாவை சந்தித்து கோரிக்கை மனு..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர், இரா. அமுதாவை மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் நடைபாதை வியாபாரி (CITU)சங்கம் சார்பாக சந்தித்து மேட்டுப்பாளையம் நடைப்பாதை வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாகவும் மேலும் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதி சம்பந்தமான பொது கோரிக்கைகளுடன் மேட்டுப்பாளையம் தாலுக்கா பொதுச் செயலாளர், எஸ். பாஷா, மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கைகளை தெரிவித்தனர், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலக மேலாளர் உடன் இருந்தார்,

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் CITU நடைப்பாதை வியாபாரிகளின் நிர்வாகிகள் அப்துல் சமது, ஷாநவாஸ்,முகமது அலி ஜின்னா, காளீஸ்வரன், ரங்கநாதன், மார்க்கெட் யாஸர், சன் ஃபியர், கலாமணி ஆகியோர் உடன் இருந்தனர்..