சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு-பைக் ஆசாமிகளுக்கு வலை..!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, உடையார் விதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி லதா ( வயது 46) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று மலுமிச்சம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லதா புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.