குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பொருட்களின் தரம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அவை கடுமையாக நோக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.
குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று விநியோகிக்கும் போது, நியாய விலைக்கடைகளில் பெறப்பட்டுள்ள பொருட்களின் தரம் சரியாக இருப்பதையும், நியாயவிலைக்கடைகளில் தரம் குறைவான பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதையும், சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் செயலாளர்/மேலாளர்/பொது மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பொருட்களின் தரம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அவை கடுமையாக நோக்கப்படும். மேலும், நியாயவிலைக்கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களின் செயலாளர்/ மேலாளர்/ பொது மேலாளர் ஆகியோர் தரம் தொடர்பான / குறைபாடுகளுக்கு நேரடியாகப் பொறுப்பாவார்கள்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply