ஜன்னல் வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த பணத்தை ஆட்டைய போட்ட திருட்டு பெண்ணுக்கு போலீஸ் வலை வீச்சு..!

கோவை ஆத்துப்பாலத்தில் மரக்கடை நடத்தி வருபவர் ஷாஜகான் (வயது 40) நேற்று இவரது கடைக்கு 40 வயது மதிக்க ஒரு பெண் வந்தார் .ஜன்னல் உள்ளதா? என்று கேட்டார்.பின்னர் அங்கிருந்த ஜன்னல்களை பார்த்துவிட்டு வாங்காமல் சென்று விட்டார் .அவர் சென்ற பிறகு மேஜை டிராயரை பார்த்த போது அதில் இருந்த ரூ. 60 ஆயிரத்தை காணவில்லை. இது குறித்து ஷாஜகான் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகிறார்கள்.