கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கோட்டூர் ,இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் பிரதீபன் ( வயது 33) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.அதே முகாமில் வசிப்பவர் பவித்ரா (வயது 27) இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் .இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர் பிரதிபன் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த பிரதிபன் பவித்ராவிடம் தகராறு செய்து நீ செத்து தொலை என்றும் மிரட்டினார்.இதனால் மனமுடைந்த பவித்ரா விஷம் குடித்தார்.சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சைபலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார் . இது குறித்து பவித்ராவின் தந்தை நடராஜன் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் விசாரணை நடத்தி கணவர் பிரதிபனை கைது செய்தார். இவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Leave a Reply