தந்தை இறந்த துக்கம் தாங்காமல் ஐ.டி நிறுவன அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை பீளமேடு காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் .இவரது மகன் அர்ஜுன் ( வயது 28 ) பி.இ.எம்.பி.ஏ .பட்டதாரி. இவர் கீரணத்தத்தில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் மனித வளம் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார் .கடந்த 27ஆம் தேதி இவரது தந்தை சந்திரசேகரன் மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அர்ஜுன் நேற்று அவரது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் லுங்கியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் அரவிந்த் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.