வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் கொள்ளை.!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்தி மேடு, பவானி நகரை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மனைவி சகாயமேரி ( வயது 60 )இவர் கடந்த 21 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார் .நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் எடை கொண்ட தங்க வளையல்கள் செயின், மோதிரம், கம்மல், ஆகியோவற்றை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து சகாயமேரி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.