இலங்கை அகதிக்கு கத்திக்குத்து-இளைஞர் கைது..!!

கோவையை அடுத்த ஆலந்தூரை பக்கம் உள்ள பூலுவ பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இங்கு வசிப்பவர் விஜயகுமார (வயது 29 ) கூலி தொழிலாளி.அதே முகாமில் வசிக்கும் தினேஷ் என்ற அண்டா ( வயது 22) இவர்கள் இருவரும் உறவினர்கள்.நேற்று,தினேஷ் பூலுப்பட்டி சந்தைப்பேட்டை அருகே குடிபோதையில் நின்று கொண்டு இருந்தார் அப்போது விஜயகுமாரின் மகள்கள் பிரின்சி, மைதிலி ஆகியோர் மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களை கடைக்கு செல்ல விடாமல் தடுத்து தாக்கினாராம்.இது குறித்து விஜயகுமார் அவரிடம் கேட்டபோது ஆத்திரமடைந்த தினேஷ் கத்தியால் அவரை குத்தினர் .இதில் விஜயகுமார் படுகாயம் அடைந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை நேற்று கைது செய்தனர். இவர் பெயின்டிங் தொழில் செய்து வந்தார். இவர் மீது கொலை முயற்சி உட்பட 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.