வால்பாறையில் ஊஞ்சல் விளையாட்டால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..!!

கோவை மாவட்டம் வால்பாறை பக்கம் உள்ள சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் இவரது மகள் சஜிதா (வயது 15) வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார் .அப்போது சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் .இது குறித்து இவரது தாய் மஞ்சுளா குமாரி வால்பாறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.