பாஜகவின் அடுத்த டார்கெட் தென்னிந்திய மாநிலங்களே… ஐதராபாத் தேசிய செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா பேச்சு..!!

தென்னிந்திய மாநிலங்களே பாஜகவின் அடுத்த இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, இந்தியாவில் வரும் 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தம்தான். உலகத்துக்கே இந்தியா தலைமை தாங்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மேற்கு வங்கத்திலும், தெலுங்கானாவிலும் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்றும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா மாநிலங்களில் விரைவில் பாஜக ஆட்சிக்கு ஆட்சியமைக்கும். தென்னிந்தியாவில் பாஜகவின் அடுத்தக்கட்ட வளர்ச்சி இருக்கும்.’ என்று தெரிவித்தார்.