காரில் ரேஷன் அரிசி கடத்தல் – 2 பேர் கைது..!

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தபடுவதை தடுக்க தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் கோவை- பாலக்காடு ரோட்டில் வாளையார் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 6 மூட்டைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதையடுத்து இதை கடத்தி வந்த பாலக்காடு மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த சிகாப் ( வயது 35) கே.ஜி. சாவடி பாஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மொ பட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.