ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் – 2 பெண்கள் கைது..!

கோவை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசிகடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 3-வது பிளாட்பாரத்தில் கேரளாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக கோவை சித்தாபுதூரைச் சேர்ந்த அமுதா (வயது 40) கேரள மாநிலம் வேலாந்தவளத்தை சேர்ந்த ஜோதி (வயது 62 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.