மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பிளாக்கர் ஹேமலதா, அவரது கணவர், கேமராமேன் 1.5 கோடி மோசடி வழக்கில் கைது..!

கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜீலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை 1.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ஹேமலதா தன்னை பின் தொடர்பவர்களிடம் 1200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் 1500 ரூபாய் தருவதாக கூறி விளம்பரம் செய்து உள்ளார். 20 நாளில் 300 ரூபாய் லாபம் கிடைக்கும் என்பதை நம்பி 100 க்கும் மேற்பட்டவர்கள் 1.5 கோடிக்கு மேல் முதலீடு செய்து உள்ளனர்.

20 நாட்களுக்கு பின் உரிய பணம் கிடைக்காததால் கடந்த 29 ஆம் தேதி ரமா என்பவர் பொருளாதார குற்றப் பிரிவில் 1.38 லட்சம் முதலீடு செய்து ஏமாந்ததாக புகார் அளித்தார்.

இதனையடுத்து ஹேமலதா அவரது கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாசலம் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர்.

விளாங்குறிச்சி அருகே மறைந்து இருந்த மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 45 சவரன், 1.75 கிலோ வெள்ளி, 7 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்பத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.