கோவை லாட்ஜில் பூட்டிய அறையில் கேரளா வாலிபர் சடலம் மீட்பு – போலீசார் விசாரணை..!

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று முன்தினம் ஒருவர் அறை எடுத்து தங்கினார்.அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அங்கு தங்கியிருந்தவர் படுக்கையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் கேரள மாநிலம் ,திருச்சூர், தெக்குமாறாவை சேர்ந்த ஆதார்ஷ் (வயது 40) என்பது தெரிய வந்தது..இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலம் குறைவால் இறந்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து லாட்ஜ் மேனேஜர் மகேஸ்வரன் காட்டூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.