கோவையில் லாரியுடன் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கூலிங்சீட் கொள்ளை – ஈரோட்டில் மீட்பு..!

கோவை: கோவை சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூரில் உள்ள ஒரு ஸ்டீல் கம்பெனியிலிருந்து பாலக்காட்டுக்கு “கூலிங் சீட்’ ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை டிரைவர் ரவி என்பவர் ஓட்டி சென்றார்.எட்டி மடையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.லாரியில் இருந்த கூலிங் சீட் மதிப்பு. ரூ 15 லட்சம் இருக்கும் .லாரியின் மதிப்பு ரூ 5 லட்சம் ஆகும்.இது குறித்து லாரி டிரான்ஸ்போர்ட் மேனேஜர் செல்வபுரம் பரமேஸ்வரன் ( வயது 64 )கே.ஜி .சாவடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே அனாதையாக நின்று கொண்டிருந்த லாரியை போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.லாரியை திருடி சென்றவர் யார்? என்பது குறித்து விசாரணை வருகிறது.