ஒரே நாளில் 5000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்… லாரி உட்பட 8 வாகனங்கள் பறிமுதல்..!

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கோவையில் பல பகுதிகளில் குழுவாகவும் தனித் தனியே வாகன சோதனை செய்த போது உக்கடம் to செல்வபுரம் சாலையில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகத்துக்கு இடமாக வகையில் நின்று கொண்டு இருந்த லாரியை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ வீதம் 60 மூட்டையில் என மொத்தம் 3,000 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்து விசாரணை செய்த போது தெற்கு உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த அபி என்கின்ற அபிப் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தலைமறைவாகி உள்ளார். இவர் ஏற்கனவே எட்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்து உள்ளார்.

மேலும் மதுக்கரை மரப்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது அவ்வழியாக வேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ வீதம் 40 மூட்டைகளில் சுமார் 2,000 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் சேர்ந்து கண்டு பிடிக்கப்பட்டது. வண்டியை ஓட்டி வந்த பாலக்காடுச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது குனியமுத்தூர் P.K புதூரை சேர்ந்த குட்டி ராஜேந்திரன் அவரது அண்ணன் மகன் சூர்யா மற்றும் வாளையார் சேர்ந்த சபீர் ஆகிய மூவரும் அரிசி உரிமையாளர்கள் என்றும் குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கள்ளத் தனமாக கேரளாவில் விற்பனை செய்து வரும்படி அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இரண்டு வழக்குகளிலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை ஓட்டுநர் சூர்யா என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாகியுள்ள அபி என்கின்ற அபிப்ரகுமான், குட்டி ராஜேந்திரன், சூர்யா, மற்றும் சபீர் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.