கோவையில் இடுப்பில் துணியை கட்டி கஞ்சா கடத்தல்- 3 வாலிபர்கள் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள கிட்டாம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் நேற்று இரவு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார்.அவர்கள் இடுப்பில் கட்டியிருந்த துணியை பிரித்து பார்த்த போது அதில் 2 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் வாகராயம்பாளையத்தை சேர்ந்த தீபக் குமார் (வயது 20 )சந்தோஷ் (வயது 24) சங்ககிரியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர்கள் இந்த கஞ்சாவை அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது .