திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறுதானிய உணவு திருவிழா.!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் அரங்கத்தில் திருச்சி தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழாவில் வட்டார அளவில் வெற்றி பெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த 14 மகளிர் சுய உதவிக் குழுவினர் இப் போட்டியில் பங்கு பெற்றனர் இந்த உணவு திருவிழாவில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய முறையில் உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தினர் இந்த கண்காட்சியை மகளிர் திட்ட இயக்குனர் சுரேஷ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதரணி ஆகியோர் தொடங்கி வைத்து மகளிர் சுய உதவி குழுவின் தயாரித்த சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுகளை சுவைத்து பார்வையிட்டனர் நிகழ்வில் மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நித்யா உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட வள பயிற்றுனர் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அலுவலர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர்கள் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த உணவு திருவிழாவை பார்வையிட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பத்திரிக்கையாளர்கள் சிறுதானிய உணவுகளை சுவைத்து ரசித்து சாப்பிட்டனர்..