கோவையில் அதிர்ச்சி : வீட்டுக்குள் ஜட்டியுடன் புகுந்து தம்பதியை தாக்கி நகை பறித்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை..!!

கோவை , அன்னூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62). இவரது மனைவி ராதாமணி (51). இவர்கள் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கலைவாணன் (28). மகள் சந்தியா(26), மருமகன் பிரதீப் (33) மற்றும் இந்த தம்பதியினரின் 7 மாத பெண் குழந்தையும் அவர்களுடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுப்பிரமணியின் வீட்டிற்குள் ஜட்டியுடன் புகுந்த கொள்ளையர்கள் 3 பேர் மேல் தளத்திற்கு சென்று கலைவாணன், சந்தியா, பிரதீப் ஆகியோர் வெளியே வராதபடி கதவை தழிட்டு அடைத்தனர். பின்னர் கொள்ளையர்கள் சுப்பிரமணி, ராதாமணி ஆகிய இருவரையும் சராமாறியாக தாக்கி, ராதாமணி அணிந்திருந்த தங்க செயினை பறித்தனர். பின்னர் வீட்டின் பின்னே  உள்ள காட்டுக்குள் சென்று மறைந்தனர். இவர்களை விடாமல் சுப்பிரமணி, ராதாமணி தம்பதியினர் துரத்திச் சென்றனர். அப்போது கொள்ளையர்கள் அவர்கள் மீது கல்,இரும்பு கம்பி வீசினர். இதனால் பயந்த அவர்கள் மீண்டும் வீட்டுக்குள்ளேயே வந்து விட்டனர். அப்போது மேல் மாடியில் வசித்து வந்த கலைவாணன், சந்தியா, பிரதீப் ஆகியோர் கீழே நடக்கும் சம்பவங்கள் தெரிந்து வெளியே வர முயற்சி செய்தனர். இவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு கதவு தாழிடப்பட்டது தெரியவந்தது. அவர்களின் கதவை சுப்பிரமணி மற்றும் ராதாமணி திறந்து விட்டார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் டி எஸ் பி பாலாஜி செல்வராஜ், அன்னூர் காவல்துறை ஆய்வாளர் நித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அதே நேரத்தில் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே வசிக்கும் பழனிச்சாமி என்பவரின் இருசக்கர வாகனமும் திருட்டுப் போய் உள்ளது. இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.