தொழிலாளியை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது..!

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு தோலனூரை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 48 )இவர் கோவையில் கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு இவர் லங்கா கார்னர் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை மிரட்டி, அவரது சட்டை பையில் இருந்த 500 ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர் .இது குறித்து சுந்தரம் உக்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்து மலப்புரத்தைச் சேர்ந்த கபீர் ( வயது 35) கவுண்டம்பாளையம் சிவா ( வயது 38 )மதுரையை சேர்ந்த சந்தோஷ் (வயது 34) ராமநாதபுரம் நாகராஜ் ( வயது 41 )ஆகியோரை கைது செய்தனர்.