பேராசிரியர் வீட்டில் 9 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!

கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது 38) இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர் .அவர்களை பார்த்துக் கொள்வதற்கு குளத்துப்பாளையத்தை கலைச்செல்வி (வயது 46) என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு வராமல் இருந்தார். இந்த நிலையில் சிவச்சந்திரன் தனது குழந்தைகளின் காதணி விழாவுக்காக பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 9 பவுன் நகைகளை காணவில்லை. இது குறித்துவடவள்ளி போலீசில் சிவச்சந்திரன் புகார் செய்தார். புகாரில் வேலைக்கார பெண் கலைச்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார் .அதன் பேரில் கலைச்செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.அவரை போலீசார் கைது செய்தனர். நகைமீட்கப்பட்டது.