தனியார் ஊழியருக்கு அரிவாள் வெட்டு – நண்பர்கள் 3 பேர் கைது..!

கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் மயில கோனார் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் தங்கராஜ் ( வயது 23) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு -கட்டபொம்மன் வீதி சந்திப்பில் தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தங்கராஜை கைகளால் தாக்கி அறிவாளால் வெட்டினார்கள். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . இதுகுறித்து தங்கராஜ் ஆர். எஸ்.புரம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் கூழை என்ற சக்திவேல்( வயது 21) தொண்டாமுத்தூர் முதலிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் ( வயது 25 )வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த நவீன் குமார் (வயது 25)ஆகியோரை கைது செய்தனர் .விக்னேஸ்வரன் என்ற கணேசை தேடி வருகிறார்கள்.