திருமணம் முடிந்த மறுநாளில் திடீர் மாயம் : காதலன் கரம் பிடித்த புதுப்பெண்..!

கோவை மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரம் ,புது காலணி சேர்ந்தவர் 25 வயதான வாலிபர். இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், போத்தனூரை சேர்ந்த 23 வயதான பட்டதாரி இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கபட்டது இதையடுத்து அவர்களுக்கு கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது. 2 பேரும் புதுக்காலனி வந்தனர். மறுநாள் காலையில் எலக்ட்ரீசியன் எழுந்து பார்த்தபோது புதுப் பெண்ணை காணவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர் .அங்கும் கிடைக்கவில்லை உடனே அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து போத்தனூர் பகுதியில் தேடிப் பார்த்தனர். கிடைக்கவில்லை .இந்த நிலையில் அந்த இளம் பெண்ணின் கணவரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது அதில் உங்களுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை எனவே நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என்னை யாரும் தேட வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தது இந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார் .இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகிறார்கள்.போலீஸ் விசாரணையில் அந்த புதுப் பெண் ஒருவரை காதலித்து வந்ததும் அந்த காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த இளம் பெண்ணுக்கு அவர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர் என்பதும் தெரிய வந்ததது .மேலும் காதலனுடன் ஓடிய அந்த புதுப் பெண் தனது காதலனையே திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.