கோவை அருகே சிற்பி மர்ம சாவு – கொலையா..? போலீசார் தீவிர விசாரணை.!!

கோவை பேரூர் பக்கம் உள்ள மாதம்பட்டி,சிறுவாணி ரோடு ,இந்திரா காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரத மகன் வடிவேல்( வயது 42) சிலைகள் செய்யும் சிற்பி. இவர் நேற்று காளப்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் பிணமாக கிடந்தார்..இவரது உடலில் ரத்தக்காயம் இருந்தது. இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகர் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இவரை யாரோ கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.