போலியான முகநூல் கணக்கை தொடங்கி மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட கணவர் கைது..!

கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒரு புகார்கொடுத்தார். அதில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், இந்நிலையில் தனது கணவர் போலியான முகநூல் கணக்கை தொடங்கி அதில் அந்தப் பெண் மற்றும் அவரது பெற்றோர் புகைப்படத்தை முகப்புப்படமாக வைத்து ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு மேலும் அதில் அந்த பெண்ணின் அலைபேசி எண்ணை சேர்த்து பதிவிட்டு வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கூறி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இக்குற்றத்தில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சந்திரன் மகன் கண்ணன் (32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி குற்றச்செயலுக்கு பயன்படுத்த 3 செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளைபறிமுதல் செய்தனர். மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.மேலும் இது குறித்து கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் இவ்வாறு பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை மிகவும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் மேலும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் இவ்வாறு சமூக வலைதள குற்றங்களில் பாதிக்கப்படும்போது, இது தொடர்பாக எவ்வித தயக்கமுமின்றி புகார் அளிக்க முன் வரவேண்டும் அவ்வாறு புகார் கொடுக்கும் பட்சத்தில் புகார் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட இவ்வாறான குற்றங்கள் நடைபெறாமல் வருங்காலங்களில் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்மேலும், இணையதளம் மூலமாக உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால்கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.