சூலூர் அருகே 4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள பாரதிபுரத்தில் ஒரு திருமண மண்டபம் அருகே சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்றிரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பள்ளபாளையம் பாரதிபுரத்தைச் சேர்ந்த சரவணன் (26)பட்டணம் புதூர் கிரித்கரன் ( 31 )பீடம் பள்ளி அஸ்வின் ( 21 ) பாரதிபுரம் அஜித் (23) என்பது தெரியவந்தது. 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.