அக்கா-தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அம்மாவின் கள்ளகாதலன் போக்சோவில் கைது..!

கோவையைச் சேர்ந்த 13 வயது மற்றும் 10 வயது சிறுமிகளின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். .அவருடைய 42 வயது நண்பரான அபுதாகீரிடம் சிறுமிகளின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறுமிகளின் வீட்டில் தங்கத் தொடங்கினார் .கட்டிட வேலைக்கு  சரியாக செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார் .அப்போது அவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த 2 சிறுமிகளையும் (அக்கா – தங்கை)பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அந்த சிறுமிகள் தங்களது தாயிடம் புகார் செய்தனர்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமிகளின் தாய் கோவை அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் யசோதா தேவி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபுதாகீரை நேற்று கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.