மாணவர்களை மதமாற்ற முயன்றதாக மாணவி பரபரப்பு புகார்- பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்.!!

கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை பியட்றிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,மதமாற்ற புகாரில் சிக்கிய தையல் ஆசிரியயை பியட்றிஸ் தங்கம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.