கோவை பீளமேட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 46) பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் ( வயது 43) இவர்கள் இருவரும் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரசுமேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது பற்றி பள்ளியில் நடந்த போக்சோ விழிப்புணர்வு மூலம் அந்த மாணவி 10 91 என்ற எண்ணில் புகார் செய்தார். இது குறித்து குழந்தைகள் நல அலுவலர்கள் நடத்திய விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர்கள் 2பேரும் சேர்ந்து பாலியல் ரீதியாக அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர்கள் பாலச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் மாணவிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply