கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு

கோவை சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு

கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் .மேலும் சிறையில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு அதே வளாகத்தில் அமைந்து உள்ளது. இந்நிலையில் கோவை மத்திய சிறைச் சாலையின் ஜெய்லர் சிவராஜன் போலீசார் உடன் கண்காணிப்பு பணியில் சிறை வளாகத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு இருந்த சந்தன மரம் ஒன்று அறுத்து எடுத்து செல்லப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் . தொடர்ந்து அவர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.