கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது

கோவையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த பெண் கைது

கோவை அடுத்த கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் இவருடைய மனைவி . இவர் கருமத்தம்பட்டி நாலு ரோடு அருகே மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் அவர் அங்கு வருபவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பதோடு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் அந்த கடையை கண்காணித்தனர். இதை அடுத்து சமூக நலத் துறையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அந்தக் கடையில் மருத்துவம் பார்க்கிறார்களா என்று அறிந்து கொள்வதற்காக சென்றார். அவர் அங்கிருந்த சத்யாவிடம் தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவர் தான் மருத்துவம் பார்ப்பதாக கூறி மருந்து கொடுத்துள்ளார். இதன் மூலம் சத்தியா போலி டாக்டராக செயல்பட்டது உறுதியானது. இது குறித்து மணிகண்டன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திராவிடம் புகார் செய்தார். இது பற்றி அவர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக வழக்கு பதிவு செய்து. சத்யாவை போலீசார் கைது செய்தனர். பட்டப் படிப்பு மட்டுமே படித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் சத்யாவை கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.