ரூ. 10 லட்சம் கேட்டு தாயாரை தாக்கி கொலை மிரட்டல் -மகள், மருமகன், உட்பட 3 பேர் மீது வழக்குபதிவு ..!

கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மனைவி இராமத்தாள் ( வயது 72)இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார் ..இந்த நிலையில் இவரது மகள் கோகிலா, மருமகன், கண்ணன் பேரன் மோனிஷ் ஆகியோர் சேர்ந்து ராமாத்தாளிடம் ரூ. 10 லட்சம் கேட்டார்கள் .அவர் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கோகிலா அவரது கணவர் கண்ணன் மகன் மோனிஷ் ஆகியோர் சேர்ந்து மூதாட்டி ராமதாளை கைகளால் தாக்கினார்களாம் .பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்து ராமாத்தாள் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் விசாரணை நடத்தி மகள் கோகிலா ,மருமகன் கண்ணன், பேரன் மோனிஷ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.