ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி வருவாய்.. முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்..!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தார் ஒரே ஆண்டில் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளனர்.

இதற்குப் பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் ஒரேஆண்டில் ரூ.30,000 கோடி வரைமுறைகேடாக சம்பாதித்துள்ளார்கள் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோவை வெளியிட்டிருந்தார்.

கடந்த14-ல் நாங்கள் வெளியிட்ட’டிஎம்கே ஃபைல்ஸ்’ என்ற காணொலிக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக நிதியமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. தற்போது வரை திமுக அரசு அதற்கு எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனமாக இருப்பது, மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப் படை தாக்குதல் என்பதை ஆரம்பத்திலிருந்தே பாஜக கூறிவந்தது. அதை, தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், திமுக தற்போது வரை சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என்று மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

அதே சமயம், முதல்வர் ஸ்டாலின் குடும்பம், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே வருடத்தில்ரூ.30,000 கோடி முறைகேடாக சம்பாதித்துள்ளது. இப்படி மக்கள் விரோதமாக செயல்பட்டு வருவதைஇனியும் அனுமதிக்க முடியாது. ஊழலில் கொழிக்கும் தனது குடும்பத்தாரின் இந்த செயலுக்கு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.