கோவை குனியமுத்தூர் பிருந்தாவன் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். இவரது மகள் அனிதா (வயது 40) கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.செல்வகுமார் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வகுமார் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதனால் அனிதா தனது 2குழந்தைகளுடன்குனியமுத்தூர் மின் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் வடகோவை, மருத குட்டி வீதியை சேர்ந்த அலெக்ஸ் பிரான்சிஸ் என்பவர் அனிதாவுக்கு அறிமுகமானார் அவரை திருமணம் செய்து கொள்வதாககூறினார். இதையடுத்து 28-4-2022 அன்று குனியமுத்தூரில் உள்ள ஒரு சர்ச்சில் வைத்து இவர்களுக்கு திருமணம் நடந்தது.இந்த நிலையில் அனிதாவின் மகளுக்குஅலெக்ஸ் பிரான்சிஸ் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாராம். இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு அலெக்ஸ் பிரான்சிஸ் கைது செய்யப்பட்டார்.இதனால் அனிதா அவரை விட்டு பிரிந்து விட்டார். இந்த நிலையில் அலெக்ஸ் பிரான்சிஸ் அனிதாவிடம் திருமணத்தின்போது வாங்கிய ரூ. 20 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அலெக்ஸ் பிரான்சிஸ் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்,
Leave a Reply