கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் டோமினிக் சேவியர் ( வயது 22) என்ஜினியர். இவர் வேலை தேடி வந்தார். அப்போது ஆன்லைனில் வேலை இருக்கிறதா ?என்று பார்த்தார். ஆன்லைனில் ஒரு முகவரி இருந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.உடனே அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு டோமினிக் சேவியர் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசியவர் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறினார் .அதன்படி அவர் முதலில் குறைந்த அளவில் பணத்தை முதலீடு செய்தார் .அதற்கு உடனடியாக லாபம் தொகையை அனுப்பினார்கள். இதனால் அந்த நிறுவனத்தில் மீது நம்பிக்கை அடைந்த டோமினிக்சேவியர் கடந்த மாதம் 9 -ந்தேதி முதல் 13-ந் தேதி வரை ரூ. 13 லட்சம் முதலீடு செய்தார் . ஆனால் அதற்கு அந்த ஆன்லைன் நிறுவனம் லாபத்தையோ அல்லது அவர் செலுத்திய பணத்தையோ திரும்ப கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டோமினிக்சேவியர் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்…
Leave a Reply