கோவை கல்லூரிகளில் ராக்கிங், போதை மாத்திரை விற்பனை தடுக்க தனிப்படை-போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்.!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது-கோவையில் விரைவில் பள்ளி- கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவ மாணவர்களை
ராக்கிங் செய்வது மற்றும் கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதை தடுக்க தனிப்படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது.மேலும் கல்லூரிகளில் அக்கா திட்டத்தில் பணி புரியும் பெண் போலீசார் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளனர்.ஒவ்வொரு கல்லூரிகளிலும் போதைப் பொருள், ராக்கிங் தடுப்பு விழிப்புணர்வு குறித்து போலீஸ் அதிகாரிகள் மருத்துவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.சிங்காநல்லூர் சிக்னல் பகுதியில் செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.உழவர் சந்தை அருகே வாகனங்கள் திரும்பும் இடத்தில் சாலைகள் பழுதுபார்க்கப்பட்டு அகலப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்..