கோவை நர்ஸ் மர்ம சாவு – கொலையா..? போலீஸ் தீவிர விசாரணை.!!

கோவை : தூத்துக்குடியை சேர்ந்தவர் முத்துராஜ் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார் .கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்கள் கோவை வடவள்ளி வி. என் .ஆர்.நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்கள். ராமலட்சுமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் ராமலட்சுமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துராஜ் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் ராமலட்சுமியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வடவள்ளி போலீசார் முத்துராஜிடம் விசாரணை நடத்திய போது ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன். திரும்பி வந்து பார்க்கும்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்யப்பட்டதாக கூறினார். ராமலட்சுமி தந்தை அளித்த புகாரில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் ‘கணவர் முத்துராஜ் தனது மகளை அடித்துக் கொன்று விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வடவள்ளி போலீசார் மர்ம சாவு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..