ரூ11 லட்சம் ஆன்லைன் வேலை வாய்ப்பு மோசடி – கோவை சைபர் கிரைம் போலீசில் புகார்..!

கோவை அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சிங்காரம். இவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார் .அப்போது ஒரு டெலிகிராம் ஐ.டி. மூலம் வந்த ஒரு லிங்கில் தொடர்பு கொண்டார். அதில் சில போட்டிகளில் கலந்து கொண்டு சிறிய தொகையை சிங்காரம் பெற்றார். இதனால் ஆசை அடைந்த சிங்காரம் மேலும் முதலீடு செய்ய ஆரம்பித்தார் .மொத்தம் 13 பணவர்த்தனைகள் மூலம் ரூ. 10 லட்சத்து 90 ஆயிரத்து 600 -ஐ அந்த ஆன்லைன் நிறுவனம் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார். ஆனால் அவருக்கு எந்த லாபத்தொகையும் வரவில்லை .செலுத்திய தொகையும் திரும்ப கிடைக்கவில்லை. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிங்காரம் செலுத்திய வங்கி கணக்கில் இருந்த மோசடி ஆசாமிகளின் கணக்கில் இருந்த ரூ. 43 லட்சத்து 99 ஆயிரத்து 711 – ஜ முடக்கம் செய்தனர். சிங்காரம் செலுத்திய தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைன் பொதுமக்கள் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இழந்த பணத்தை பெற நடவடிக்கை எடுக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.