திக்.. திக்.. திடீரென கீழே விழுந்து நொறுங்கிய இந்திய விமானப் படை விமானம்… பாராசூட் உதவியுடன் உயிர் தப்பிய பெண் விமானி..!

ர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதிலிருந்த விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பியுள்ளது. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

இந்த விமானத்தில் எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளன. விபத்துக்குள்ளான சூர்ய கிரண் ரக விமானம், இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிட்-ஆல் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமன்கர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் (எம்ஐஜி) -21 ரக விமானம் குடியிருப்பு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.