குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை.. முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை.!!

மிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அந்த வகையில் இந்த மகளிருக்கான உரிமை தொகையை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இதற்கு தகுதியான பயனாளிகளின் பட்டியல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த மகளிர் உரிமைத் தொகையை தமிழக அரசு நேரடியாக தருமா? அல்லது வங்கிகணத்தில் செலுத்துமா? என்ற சந்தேகமும் பொதுமக்களிடையே உள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று பல்வேறு துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இதனையடுத்து இன்று மகளிர் உரிமைத் தொகை யார் யாருக்கு வழங்கப்படும் மற்றும் நேரடியாகவா அல்லது வங்கி கணக்கில் செலுத்தப்படுமா என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..